Monday, January 30, 2012

மாற்றங்கள் ...

மாற்றங்கள் ...
நமது வாழ்வில் மெருகேற்ற வேண்டும்...
துரு ஏற்ற அல்ல ...

- கோபு நடராசன்

செந்நிலா ....


--
சிகப்பாக வெண்ணிலா .....
ஓ...
என்னவள் நாணத்துடன் ....

- கோபு நடராசன்

என் பரிணாமம் .....



முதன் முதலில்
உன் பார்வையால் என்னை ..
பித்தனாக்கினாய்...
...
பின்..
உன் நட்பால் என்னை ...
மனிதனாக்கினாய்

இன்று...

உன் பிரிவால் என்னை

கவிஞனாக்கினாய்....
- கோபு நடராசன்

தலைவன்

பயம் சிறிதும் அற்றவன் ...
பழிக்கு அஞ்சுபவன் ...
உண்மையான தலைவன் ஆவான்.....

"கடவுள் ஒரு பொய் நம்பிக்கை

புத்தக கண்காட்சியில் ...Richard Dawkins எழுதிய The God delusion 'ன் மொழியாக்கம் "கடவுள் ஒரு பொய் நம்பிக்கை" - பெரியார் பிரசுரம் .. வாங்கி படித்தேன் ... நாம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் ...
எவ்வாறு வெறும் நம்பிக்கையின் மீது மட்டும் அமைந்த .. உருவாக்கப்பட்ட நமது மதங்கள் .... நம்மை முட்டாளாக ....மூட நம்பிக்கை மிக்கவர்களாக ... இந்த அறிவியல் யுகத்திலும் வைத்திருக்கிறது என்று .. தெளிவாக ... அறிவியல் பூர்வமாக விளக்கும் புத்தகம் ..... ஒருமுறை படித்து பாருங்கள்..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ....

தித்திக்கும் செங்கரும்பாய் இனிக்கும் இத் "தை"
புத்திக்கு ஒவ்வாத தீது தனை சி"தை"
வித்தாகும் நல் எண்ணம் இனி நம் பா"தை"
எத்திக்கும் புகழ் மணக்க வாழும் தமிழர் நம் க"தை"

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ....
- கோபு நடராசன்