Tuesday, April 22, 2008

அழகாய் அவள் ....

(கவிதை)
பூக்கள் அழகாய் இருக்கின்றன ...
உன் கூந்தலில் இருப்பதனால் ...

நிலவு பிடிக்கிறது ...
உன் முகம் போல் தெரிவதனால் ...

தென்றல் குளிர்கிறது ....
உந்தன் மொழி போல் விசுவதால் ...

மயில் நடம் ஆடுகிறது...
உன் நடைதனை கண்டவுடன் ...

தேன் பலா இனிக்கிறது ...
உன் இதழ்களின் சுவை போலே ....

இருளும் வியக்கிறது ...
உன் கரு விழி தனை போலே ....

வாழ்தல் விரும்புகிறேன் ...
உந்தன் காதல் இருப்பதனால் ...

- கோபு நடராசன்

Wednesday, April 16, 2008

அவள் ...



(கவிதை)

விழிகளில் மட்டும் பேசினாள் ...
மொழியின் தேவை இன்றி ...

நிலவு முகம் கொண்டவள் ...
களவு செய்தனள் என் மனதை..

மனதை மழையாய் குளிர்வித்தாள் ..
எனதருமை காதலியாய் நிதம் எனை ...

சிலையாய் நீ என் முன் நிற்க
விலையாய் என் மனதை நான் விற்க ..

தமிழாய் உன் உதடுகள் தேன் சுரக்க ..
அமிழ்தாய் என் நெஞ்சம் அதை பருக ...

கனவினிலே நாம் வாழ்ந்தது இனி போதும் ..
நனவினிலே நீ வந்து சேர் கண்ணே !

- கோபு நடராசன்






சிந்திக்க ..

புதுமை பழமை எதுவானாலும் பகுத்தறிவு கொண்டு
சிந்தித்து தெளிதல் வேண்டும் ...

- கோபு நடராசன்

Tuesday, April 15, 2008

மரணம் ...

நிச்சயம் அனைவருக்கும் வருவது ...

வீரனுக்கு ஒரு முறை மட்டும் வருவது ...

சிலர் தனக்கு வராது என்று நினைப்பது ...

மதங்களின் பிரச்சாரத்திற்கு பயன் படுவது ...

காலத்தினால் மறக்கப்படுவது ...

வெகு சிலரை மட்டும் நினைவு கூற வைப்பது ...


- கோபு நடராசன்

என் காதலி....

கண்களால் கைது செய்தவள்...

காதலால் உருக செய்தவள்...

கனவினில் வந்து சென்றவள்...

காற்றினில் தொலைந்து போனவள்...


- கோபு நடராசன்

Saturday, April 12, 2008

மதம்

மதம் .....

நம் சிறு வயதிலிருந்தே நமக்கு தரப்படும் போதை ....
செய்யும் தவறுகளுக்கு தேடும் சாக்கு ....
சிலர் செழித்து வளர உதவும் அமுதசுரபி ....
பகுத்தறிவை புதைக்கும் சமாதி ...
பலரை முட்டாளாக்கி சிலர் செய்யும் ஏமாற்று ...
கற்றவரும் ஏமாறும் சித்து ...
மொத்தத்தில் நாம் அனைவரையும் ஆக்கிவிடும் பித்து ....

- கோபு நடராசன்

மாற்றம் ...

மாற்றம் வாழ்வியல் நியதியின் அடிப்படை....
மாற்றங்களோடு சேர்ந்து வாழ கற்று கொள் ...
- கோபு நடராசன்

Wednesday, April 09, 2008

வலையில் .... முதல் கவிதை...


என் காதலி .....
முதல் பார்வையில் என் உயிரை விழுங்கினாள்....
சிந்தனையை சிறையாக்கினாள்...
கனவுலகினில் கவிதை பாடினாள் ...
நினைப்பதனால் சுகம் கூட்டினாள் ...
நெஞ்சினில் நடம் ஆடினாள்
பார்வையில் நிதம் மதம் ஏற்றினாள் ...

நான் நெருங்க எனை ஏன் ஏமாற்றினாள் ...

- கோபு நடராசன்


வரவேற்பு ....

உங்களை இந்த வலை பதிவிற்கு இனிதே வரவேற்கிறேன் ....

- கோபு நடராசன்